பிஷான் Ang Mo Kio Park கார் விபத்து இரண்டு முதியவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்

0

சனிக்கிழமை (ஜூன் 8) காலை பிஷான்-ஆங் மொ கியோ பூங்காவின் கார் பார்க் பகுதியில் நான்கு கார்கள் அடுத்தடுத்து மோதி, இந்த விபத்து நடந்தது. TikTok-ல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், இரண்டு கார்கள் சரிவில் மாட்டிக்கொண்டதையும், மற்றொரு கார் முன்னால் இருந்த கார் மீது மோதியதையும் பார்க்கலாம்.

விபத்து நடந்த நேரம் காலை 7:45 மணி என்று சொல்லப்படுகிறது. ஒரு கார் வாகன நிறுத்தத்தில் இருந்து வெளியே வந்தபோது, சரியான நேரத்தில் பிரேக் அடிக்கத் தவறியதால் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் 89 வயது ஓட்டுநரும், அவருடன் பயணித்த 90 வயது நபரும் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் தஞ்சோங் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தற்போது போலீசாருக்கு விசாரணையில் உதவி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.