புக்கிட் திமா விரைவுச் சாலையில் BlueSG மின்சார கார் தீப்பற்றியது!
BlueSG Electric கார் புக்கிட் திமா விரைவுச் சாலையில் (BKE) Dairy Farm Road வெளியேறும் பகுதியில் பிப்ரவரி 17 அன்று இரவு 9:20 மணியளவில் தீப்பற்றியது. சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தகவல் கிடைத்தவுடன் விரைவாக நடவடிக்கை எடுத்தனர்.
தீ அணைக்க SCDF தீயணைப்பாளர்கள் சிறப்பு தீயைத்தடுக்கக்கூடிய போர்வையை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தி புகை பரவுவதை தடுத்தனர்.
மேலும், தண்ணீர் ஜெட்டுகள் மற்றும் சிறப்பு சாதனங்களைப் பயன்படுத்தி காரின் பேட்டரி பகுதிக்கு நேரடியாக நீர் பிறயோகித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.
மின்சார கார்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் காரணமாக, அவற்றுக்கு மீண்டும் தீப்பற்றும் அபாயம் அதிகம் என SCDF விளக்கியது.
ஒருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டதால், அவரை சிங்கப்பூர் ஜெனரல் மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.