காஸ்‌வேயில் பஸ் வழிச்சாலையில் நுழைந்த கார் விபத்து மூன்று கார்கள் சேதம்.

0

ஜூலை 17 காலை, சுமார் 11.19 மணிக்கு, வுட்லந்த்ஸ் சோதனைச்சாவடிக்கு செல்லும் வழியில் காஸ்‌வே பகுதியில் மூன்று சிங்கப்பூர் பதிவு பெற்ற கார்கள் மற்றும் ஒரு காஸ்‌வே லிங்க் பஸ் மோதிக் கொண்டன. ஒரு சாம்பல் நிற கார் திடீரென பஸ் வழிச்சாலையில் நுழைந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது.

பஸ்ஸுக்கு அந்த நேரத்தில் நிறுத்த முடியாமல், கார் மீது நேரடியாக மோதி விட்டது. இம்மோதளால் அந்த கார் சறுக்கி மற்றொரு கருப்பு மற்றும் வெள்ளை கார்களில் மோதியது. இணையத்தில் வெளியான வீடியோக்களில் மூன்று காற்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அனைத்து டிரைவர்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. வாகன ஓட்டிகள், சாலை விதிகளை கடைபிடித்து கவனமாக ஓட்ட வேண்டும் என ஜொகூர் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.