ஆடம் சாலையில் கார் விபத்து: இரு முதியவர்களின் பரிதாபமான மரணம்!
சிங்கப்பூரில் டிசம்பர் 28 அன்று இடம்பெற்ற கார் விபத்தில் இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.
ஆடம் சாலையில் மாலை 6.10 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றது. 77 வயது முதியவர் லோர்னி வீதியை நோக்கி பயணித்த போது ஓட்டிச் சென்ற கார், சாலையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. காரில் 72 வயது மூதாட்டியும் இருந்துள்ளார்.
இந்த விபத்தில் டிரைவர் மற்றும் பயணி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்