ஏஜெண்ட்கள் உண்மையில் வேலைக்கு Apply செய்தார்களா? MOM இணையதளத்தில் சரிபார்ப்பது எப்படி?
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, உங்கள் வேலைக்கான விண்ணப்பம் ஏஜெண்டால் உண்மையில் சமர்ப்பிக்கப்பட்டதா என்பதை
IPA வருவதற்கும் முன் உங்கள் வேலைவாய்ப்பு விண்ணப்ப நிலையை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?
சிங்கப்பூரில் வேலைக்காக வரும் தொழிலாளர்களுக்கு, IPA (In-Principle Approval) கிடைக்கும் முன்பே தங்களுக்காக வேலைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளும் வழிகள் உள்ளன. இந்த பதிவில், அந்த முறையை எளிமையாக விளக்குகிறோம்.
யார் யார் இந்தச் சேவையை பயன்படுத்தலாம்?
Work Permit, PCM மற்றும் Shipyard Permit மூலம் சிங்கப்பூருக்கு வரவிருக்கும் அனைத்து தொழிலாளர்களும் இந்தச் சேவையை பயன்படுத்தி தங்கள் வேலைக்கு ஏஜென்ட் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
எங்கு சென்று தகவல் தெரிந்துகொள்ளலாம்?
MOM (Ministry of Manpower) அதிகாரப்பூர்வ இணையதளம் mom.gov.sg ஐ அணுகி, “Check work pass and application status” என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் தமிழை மொழியாகத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் விவரங்களை உள்ளீடு செய்வது எப்படி?
உங்கள் பிறந்த தேதி (Date of Birth) மற்றும் பாஸ்போர்ட் எண் பயன்படுத்தி உள் நுழையலாம். அதன் பிறகு உங்கள் வேலைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதா, Application நிலை என்ன போன்ற தகவல்களை பார்க்கலாம்.
Status-கள் என்ன கூறுகிறது?
PENDING என்றால்: உங்கள் வேலைக்கு MOM-ல் விண்ணப்பம் செய்யப்பட்டு, அது இன்னும் செயலாக்கத்தில் இருக்கிறது.
VALID என்றால்: உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
INVALID என்றால்: உங்கள் விண்ணப்பத்தில் பிழை உள்ளதால், அது நிராகரிக்கப்பட்டிருக்கலாம். இந்த நிலை வந்தால் உடனே உங்கள் ஏஜென்டை தொடர்புகொள்ள வேண்டும்.
எந்த Status-உம் (Pending, Valid, Invalid) தோன்றவில்லை என்றால்: உங்கள் வேலைக்கு ஏஜென்ட் மூலம் விண்ணப்பம் செய்யப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.
ஏஜெண்ட் தெளிவான பதில் அளிக்கவில்லை அல்லது ஆதாரம் காட்ட மறுத்தால், விண்ணப்பம் செய்யப்படாமல் இருக்கலாம்.
இந்த முறையின் மூலம், உங்கள் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு நிலையை நேரடியாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ளலாம்.