சிங்கப்பூரில் வேலைக்கு ஏஜெண்டுக்கு பணமே கொடுக்க வேண்டாம்! கைகொடுக்கும் LinkedIn! நேரடி அப்பாயிண்ட்மெண்ட் உங்கள் கைக்கு கிடைக்கிறது

0

சிங்கப்பூர் வேலை பெறுவது கடினமாகி வருகிறது. ஆனால், பணம் இருந்தால், ஏஜெண்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல நினைப்பவர்கள் அதிகம். இதனால் ஆரம்பதொகை அதிகமாக இருந்தால், சம்பாதித்த பணமும் ஏஜெண்ட்க்கு கொடுத்த பணமும் சரி சமமாக இருந்தால் என்ன செய்வதென்ற கவலை அனைவருக்கும் இருக்கும்.

இந்த அவசரத்தை தவிர்க்க, சிங்கப்பூரில் வேலை பெற ஏஜெண்டே இல்லாமல், எப்படி முயற்சிக்கலாம் என்று பார்ப்போம். லிங்க்ட்இன் வேலை தேடுபவர்களுக்கு முதன்மை தளமாக மாறியுள்ளது. லிங்க்ட்இன் என்பது சமூக வலைத்தளம், ஆனால் அது விளையாட்டும் பொழுதுபோக்குமல்ல, வேலைவாய்ப்புகள், அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களைப் பகிர்வதே முக்கியம்.

பெருநிறுவனங்கள் முதல் தொடக்கநிறுவனங்கள் வரை முக்கிய நபர்கள் இருப்பது லிங்க்ட்இன் தான். லிங்க்ட்இன்னில் உங்களது சுயவிவரத்தை (Updated resume) பதிவேற்றி, Open என்ற நிலையை தேர்ந்தெடுங்கள். இதனால் சில நேர்காணல் அழைப்புகள் கிடைக்கலாம். லிங்க்ட்இன் ஏஜெண்ட்கள் இல்லாமல், நிறுவனங்களே நேரடியாக உங்களை தொடர்பு கொள்கின்றன.

சிங்கப்பூரில் லிங்க்ட்இன் மூலம் வேலை தேட, இதைப் பின்பற்றுங்கள்:

  1. LinkedIn இணையதளத்திற்கு சென்று, கணக்கு இல்லையென்றால் புதிதாக கணக்கு உருவாக்குங்கள்.
  2. உங்களது அண்மைய சுயவிவரத்தை பதிவேற்றுங்கள். பிறகு, Jobs பகுதியில், Singapore என தட்டச்சு செய்து, Jobs என்பதை தேர்வுசெய்யுங்கள்.
  3. வேலைவகை, தொழில்துறை, அனுபவம் போன்றவற்றைப் பொருத்து Filter பயன்படுத்தி வேலை தேடுங்கள். வேலைவாய்ப்பு பட்டியலை முற்றிலும் படித்து, அதில் கம்பனிகள் கூறியுள்ள குறிப்புகள் மற்றும் தேவைகளைப் படியுங்கள்.
  4. விருப்பமான வேலை கிடைத்தால் Apply பொத்தானை அழுத்தி, நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.
  5. எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதையும் பார்க்கலாம். சுயவிவரம், நிறுவன தேவையை ஒத்துப்போனால், அவர்கள் உங்களை நேர்காணலுக்காக தொடர்பு கொள்வார்கள்.

முக்கியமானது, முயற்சியை ஒருபோதும் கைவிட வேண்டாம். தினமும் LinkedIn ஐப் பாருங்கள், மேல் கூறிய படிமுறைகளைப் பின்பற்றி வேலை தேடுங்கள். தினமும் புதிய வேலைகள் அப்டேட் ஆகும், பொருத்தமான எல்லா வேலைக்கும் Apply செய்யுங்கள்.

LinkedIn இல் Premium பகுதியும் உள்ளது. இது இலவசமாக LinkedIn ஐப் பயன்படுத்துவதைவிட அதிக வேலைவாய்ப்புக்கள் மற்றும் கணக்கை அதிகமானோருக்கு தெரியப்படுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ளது. LinkedIn Premium ஐப் பயன்படுத்தி வேலை தேடுங்கள். Premium பயன்படுத்தும்போது அனைத்து வேலைகளும் உடனடியாகவே காட்டப்படும். புதிய வேலைகள் பதிவிடும்போது உடனடியாக Apply செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு LinkedIn Premium இலவசமாக கிடைக்கும். இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்துங்கள்.

LinkedIn மூலம் சிங்கப்பூர் சென்றவர்களே அதிகம். தொடர்ந்து முயற்சியுடன் வேலை தேடினால் நிச்சயமாக கிடைக்கும். லிங்க்ட்இன் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை ஏஜெண்ட்களுக்கு செலவழிக்காமல் வேலை தேடுவதில் வெற்றிபெறுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.