சிங்கப்பூரில் சாலையில் விழுந்த முட்டைகள்!

0

சிங்கப்பூர் சைனாடவுனில் உள்ள அப்பர் கிராஸ் தெருவில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அங்கு சென்ற ஒரு லாரியிலிருந்து நூற்றுக்கணக்கான முட்டைகள் சாலையில் விழுந்து சிதறிக்கிடந்தன.

இந்த சம்பவம் குறித்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த ஒரு நபர் Reddit சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், சாலையில் சிதறிக்கிடந்த முட்டைகளை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்பட்டு உள்ளது. லாரி ஓட்டுநர் அவற்றை அவசரமாக அகற்ற முயன்றதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த இணையவாசிகள் சிலர், “முட்டை விலை ஏறுவதற்குக் காரணம் இதுதான்” என்று நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்தனர்.

சம்பவம் அசம்பாவிதமானதென்றாலும், சமூக வலைத்தளங்களில் இது கலகலப்பான விவாதங்களுக்கு காரணமாகியுள்ளது.

ஆதாரம் /others

Leave A Reply

Your email address will not be published.