பிளாக் 34 ஜாலான் பஹாகியாவில் அடுக்குமாடி குடியிருப்பில்தீ விபத்து 50 பேர் வெளியேற்றம்!
ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 9:30 மணியளவில், பிளாக் 34 ஜலான் பஹாகியா முகவரியில் உள்ள 6வது மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தால் சுமார் 50 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட சமயம், அந்தக் குடியிருப்பில் யாரும் இல்லை என்பது ஆறுதலான செய்தி.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) தீயணைப்பு வீரர்கள், புகை மண்டலமாக இருந்த அந்த வீட்டிற்குள் நுழைந்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்து ஒரு படுக்கை அறையுடன் கட்டுப்படுத்தப்பட்டாலும், வீட்டின் மற்ற பகுதிகள் வெப்பம் மற்றும் புகையால் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முதற்கட்ட விசாரணையில், படுக்கையறையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பு கருதி, காவல்துறையினரும் SCDF வீரர்களும் குடியிருப்பாளர்களை வெளியேற்றிய பின்னர், நிலைமை சீரானதும் அவர்களை மீண்டும் வீட்டிற்குள் அனுமதித்தனர்.