புக்கிட் மேரா HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து PMD பேட்டரி அதிக நேரம் சார்ஜிங் காரணமாக இருக்கலாம்!
கடந்த 13 ஆம் தேதி புக்கிட் மேரா HDB குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து, ஒரு தனிநபர் போக்குவரத்து சாதனத்தின் (PMD) பேட்டரி அறையில் அதிக நேரம் சார்ஜ் செய்யப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது: பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்யாதீர்கள், இரவு முழுவதும் சார்ஜில் வைத்திருக்க வேண்டாம், மேலும் எப்போதும் அசல் பேட்டரிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
இந்தத் துயரச் சம்பவம் மாலை 4 மணியளவில் பிளாக் 106 ஜலான் புக்கிட் மேராவில் உள்ள குடியிருப்பில் நிகழ்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தபோது, சமையலறையில் சுயநினைவின்றி கிடந்த ஒரு ஆணையும் பெண்ணையும் மீட்டனர். இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவில்லை.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அந்தக் குடியிருப்புக்குக் குடிபெயர்ந்த ஒரு தம்பதி என நம்பப்படுகிறது. தீ விபத்து குறித்து விசாரணை இடப்படுகின்றது.