முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் காலமானார்!

0

புதுடெல்லி இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் 92-வது வயதில் காலமானார்.

அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு 8.06 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

1932 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த மன்மோகன் சிங், பொருளாதாரத்தில் உயர்கல்வி முடித்து, இந்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.

1991-ல் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்து, இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியவர். 2004 முதல் 2014 வரை பிரதமராக பணியாற்றிய அவர், இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமராகும் பெருமையை பெற்றார்.

டாக்டர் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார், காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தை 10 ஆண்டுகள் வழிநடத்தினார். ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பிறகு, இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகித்த மூன்றாவது பிரதமராக அவரது பதவிக்காலம் அமைந்தது.

மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியல் தலைவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ஆளுமை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர் செய்த பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

Leave A Reply

Your email address will not be published.