முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்!
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரன், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த ஆண்டு ஜனவரியில் பதவியிலிருந்து விலகினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அக்டோபர் 7 முதல் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது, நன்னடத்தை காரணமாக அவரை வீட்டுக் காவலில் வைக்க சிங்கப்பூர் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.
வீட்டுக் காவலில் இருப்பவர்கள் தங்கள் மீதமுள்ள தண்டனைக் காலத்தை வீட்டிலேயே கழிக்க வேண்டும். இதற்காக, அவர்களின் நடவடிக்கைகள் மின்னணு கண்காணிப்பு மூலம் கண்காணிக்கப்படும்.
வேலைக்குச் செல்ல அனுமதி பெற்ற கைதிகள் வேலை நேரத்தில் வெளியே செல்லலாம், ஆனால் வேலை இல்லாதவர்கள் மதிய நேரங்களில் மட்டுமே சில மணிநேரங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஈஸ்வரனும் இந்த விதிகளுக்கு உட்பட்டு, தனது தண்டனைக் காலத்தை வீட்டிலேயே கழிப்பார். அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும், மேலும் வெளியே செல்லும் போது சிறைத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த முடிவு சிங்கப்பூர் சிறைச்சாலை சட்டத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.