தமிழ் நாட்டில் Skill Test Center ஓபன் பண்ணி விட்டார்களா? எப்படி Test அடிப்பது?
சிங்கப்பூரில் வேலைக்காக வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வழிகளில் வருகிறார்கள், அதில் முக்கியமான வழி Test அடித்துவந்தல். சில வருடங்களுக்கு முன்னர் அதிகமானோர் Skill Test அடித்து சிங்கப்பூருக்கு வேலைக்குத் திரண்டு வந்தனர். காரணம், Test அடித்துவருபவர்களுக்கு சிங்கப்பூரில் உயர்ந்த சம்பளம் கிடைத்தது.
கொரோனா தொற்றுக்குப் பின்னர், Skill Test அடித்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதற்குக் காரணம், Test எடுக்கின்ற Institute களுக்கு கிடைக்கும் Quota வின் அளவானது குறைவாகியிருப்பது. முன்னர் ஏராளமானோர் Skill Test அடித்துவிட்டு சிங்கப்பூருக்கு வந்து விடுவார்கள். தற்போது, Quota குறைவாக இருப்பதால் பலர் Test அடிக்க முடியவில்லை.
மேலும், Institute களில் Skill Test அடிக்க Main Test எடுப்பதற்கான காலம் அதிகமாகி உள்ளது. இக் காலம் 10 முதல் 15 மாதங்கள் வரை நீளலாம். Main Test எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், காத்திருக்க நேரிடுகிறது.
Quota குறைவினாலும், Main Test எடுப்பதற்கான காலம் நீளுவதாலும், பலர் இப்போது வேறு Pass, Permit களினூடாகவே சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்கின்றனர். தமிழ்நாட்டில் தற்போது மிகக் குறைவான Institute களே செயல்பட்டு வருகின்றன; பெரும்பாலானவை மூடியே காணப்படுகின்றன.
அனேக புதிய Institute கள் திறக்கப்பட உள்ளன. சில நம்பத்தகுந்த Skill Test Institute களின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம்:
- SV Training Center, No.28, Selliamman Koil Street, Medavakkam-Mambakkam Road, Ponmar, Chennai-600127. +91 44 6133 3138
- Hytech Goodwill Training & Testing Centre, 2/392A, Mambakkam Road, Medavakkam, Chennai 600 100. +91 44 2277 0886
- RK Singapore (BCA) Skilled Training & Testing Centre, No.2/171, East Coast Road, Pandiyan Salai, Neelankarai Opposite CSB Bank, Chennai 600115. +91 94 4393 3396
- ASTRO Training Service, Plot No: 5/6 Selvam Nagar, Ponniyamman Medu, 200 Feet Inner Ring Road, Near Retteri Junction, Chennai 600 110. +91 98 4006 3135
Quota அதிகரிக்கும் எனும் உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகியிருக்கிறது. முன்னர் போல Quota அதிகமாக இருந்தால், விரைவாக Test அடித்து சிங்கப்பூர் செல்ல முடியும். சிலர் சிங்கப்பூரில் Test அடிக்கிறார்கள். சிங்கப்பூரில் Skill Test அடிப்பது தமிழ்நாட்டைவிட செலவுசிறந்தது மற்றும் குறைந்த நேரத்தில் முடிக்கலாம்.
ஆனால், சிங்கப்பூரில் Test அடிக்க Company Letter தேவையாகும். Company Letter இல்லாமல் Test அடிப்பது கடினம். Skill Test அடித்து வருவதற்குப் பதிலாக சில புதிய Permit களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Skill Test அடிக்க முடியாதவர்கள் அவற்றின் மூலம் சிங்கப்பூருக்கு வரலாம்.
ஆனால், Permit மூலம் வருபவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் சற்றுக் குறைவாகவே இருக்கும். எனவே, சம்பளத்தை முழுமையாக ஆராய்ந்து சிங்கப்பூர் வருவது சிறந்தது.