சாங்கி விமான நிலைய டெர்மினல் 3ல் சாலை பஸ் விபத்தில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்!

0

மே 21 அன்று, சாங்கி விமான நிலைய முனையம் 3-ல் சாலை தடுப்பில் ஒரு பஸ் மோதியதில், 20 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து நண்பகல் 12.40 மணியளவில் பாதுகாப்பு தடுப்பு திறக்கப்பட்ட நிலையில், சாலை தடுப்பு திடீரென இறக்கப்பட்டதால் 858 என்ற சேவை எண் கொண்ட பஸ் விபத்தில் சிக்கியது

பஸ் நிறுவனமான Tower Transit-இன் Glenn Lim, பஸ் Driver மற்றும் 21 பயணிகள் காயமடைந்ததாக தெரிவித்தார். நிறுவனம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதோடு, காயமடைந்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவ முயற்சித்து வருகிறது.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) விபத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை Sengkang General, Raffles, மற்றும் Tan Tock Seng ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றது.

Tower Transit காயமடைந்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.