சிங்கப்பூருக்கு செல்ல Pass, Permit Visaக்களுக்கு எவ்வளவு Approval காலம் எடுக்கும்?அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

0

வெளிநாடுகளுக்கு வேலைக்காகப் பயணம் செய்யும் போது முதன்மை விசா அனுமதி மிகவும் முக்கியமானது. வேலையின்போது பலவிதமான விசாக்கள் உள்ளன.

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்கையில், நீங்கள் பெற வேண்டிய Pass அல்லது Permit இன் அடிப்படையில் அனுமதி பெறுவதற்கான நாட்கள் மாறுபடும். ஏஜென்ட் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, விசா அனுமதி நிலையை மனிதவள அமைச்சகத்தின் வலைத்தளத்தில் சரிபார்க்க முடியும்.

சிங்கப்பூர் விசாக்களைப் பொறுத்தவரை, மனிதவள அமைச்சகத்தில் அனுமதி பெற மணிநேரம் முதல் மாதங்கள் வரை எடுக்கலாம். இது நீங்கள் விண்ணப்பிக்கும் Pass ஐப் பொறுத்தே மாறுபடும். Work Permit க்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், சில மணிநேரங்கள் முதல் 3 நாட்கள் வரை அனுமதி பெற நேரம் எடுக்கலாம்.

Work Permit விண்ணப்பங்களில் பெரும்பாலானது ஒரே நாளிலேயே அனுமதி நிலையைக் காட்டிவிடும். நிலை Pending, Approved அல்லது Rejected ஆகக் கூட இருக்கலாம். முதலில் விண்ணப்பித்தவுடன் Pending எனக் காட்டும், பின்னர் Approved அல்லது Rejected ஆக மாறும்.

PCM Permit, Shipyard போன்றவையும் ஒரே நாளிலேயே பெரும்பாலும் அனுமதி பெறும், அதிகபட்சமாக 3 நாட்கள் ஆகலாம். அதற்குப்பின் கூட நிலைமாற்றம் இல்லை என்றால், ஏஜென்டை தொடர்பு கொள்ள வேண்டும். TEP Pass, TWP போன்றவையும் பெரும்பாலும் 1-3 நாட்களுக்குள்ளேயே அனுமதி பெறும்.

அதிகபட்சமாக இது இரண்டு வாரங்கள் வரை எடுக்கும். S Pass, E Pass என்பவை மற்ற Pass களுடன் ஒப்பிடும் போது சற்றுக் கூடுதல் நேரம் எடுக்கலாம். பெரும்பாலும் 2 வாரத்தினுள்ளே அனுமதி கிடைக்கும், ஆனால் சில சமயங்களில் ஒரு மாதத்திற்கு மேலும் ஆகலாம்.

ஒவ்வொரு Pass க்கும் மேற்குறிப்பிட்ட காலத்திற்கு முந்தி மனிதவள அமைச்சகத்தின் வலைத்தளத்தில் நிலை (Pending அல்லது Rejected) காணப்படாவிட்டால், கட்டாயம் ஏஜென்டை தொடர்பு கொண்டு கேட்க வேண்டும். சில சமயங்களில் போலி ஏஜென்டின் மூலம் விண்ணப்பித்தால் “No Record Found” என்று காட்டும்.

எனவே, ஏஜென்டை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.