NTS Permitயில் இருந்து S Pass மாறுவது எப்படி? S Passயில் யாருக்கு, என்னன்னெ வேலைகள் உள்ளன!

0

சிங்கப்பூரில் வேலைக்கு அதிகமானோர் S Passயிலேயே வர விரும்புகின்றனர். ஏனெனில், மற்றவைகளைப் பார்க்க S Passயில் அதிக சம்பளம் கிடைக்கிறது. சிங்கப்பூரில் வெவ்வேறு Passகளில் வேலை செய்பவர்கள் S Passக்கு மாறிக்கொள்ள முடியும்.

ஆனால், அதற்கு சில விதிமுறைகளும் வரையறைகளும் உள்ளன. இந்த பதிவில், NTS Permitயில் சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் எவ்வாறு S Passக்கு மாறுவது என்பதைப் பார்ப்போம். S Passக்கு சிங்கப்பூர் அரசு வரையறை செய்த சம்பளம் மாதத்திற்கு SGD $3,500 ஆகும். ஆனால், S Passயில் இருக்கும் எல்லோருக்கும் SGD $3,500 கிடைப்பது இல்லை.

காரணம், உயர் சம்பளம் வேலை மற்றும் அனுபவத்தில் தங்கியுள்ளது. நல்ல அனுபவம் உள்ளவர்கள் அதிகபட்ச சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும்.
NTS Permitயில் இருந்து S Passக்கு மாறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. NTS Permit ஆனது பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கானது.

எனவே, S Passக்கு விண்ணப்பிக்கும் ஊழியர் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்பவராக இருக்க வேண்டும். நல்ல கல்வித்தகுதி (Degree, MSc) மற்றும் நிலையான மாத வருமானமும் சிங்கப்பூரில் இருக்க வேண்டும்.
NTS Permitக்கு விண்ணப்பிப்பவர்கள் S Pass Self Assessment Toolஐப் பயன்படுத்தி தங்கள் தகுதியை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும், உங்களின் முதலாளியும் S Passக்கு விண்ணப்பிக்க முடியும். முக்கியமானது என்னவென்றால், S Pass கிடைக்கும் வரை உங்களது NTS Permit செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.

அத்துடன், S Pass விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, S Pass வழங்கப்படும் முன் NTS Permit ரத்து செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். NTS Permit காலாவதியாகவுள்ளது எனின், இதை முதலாளிக்கு அறிவித்து Permit காலத்தை நீட்டிக்க சொல்ல வேண்டும்.

தற்போது அதிகம் S Pass வேலைகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான துறைகளில் காணப்படுகின்றன. வெளிநாட்டு ஊழியர்களுக்கான S Pass பங்கு முன்பு காட்டிலும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.