சிங்கப்பூரில் Shipyard, PCM Permitல் இருந்து S passக்கு எப்படி மாறுவது?
சிங்கப்பூரில் வேலை பெற பலர் ஏஜண்ட்களுக்கு பல லட்சம் செலவிடுகின்றனர். சிலர் குறிப்பிட்ட சிலர் Skill Test அடித்தும் பெறுகின்றனர். சிங்கப்பூருக்கு வரும் பாஸ், பர்மிட்டுக்கேற்ப சம்பளம் மாறுபடும்.
Shipyard, PCM போன்ற பர்மிட்டுகளின் மூலம் சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு S Pass-ஐ விட குறைவான சம்பளம் கிடைக்கும். Shipyard, PCM போன்ற வேலைகளில் SGD $500 முதல் SGD $1000 வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் S Pass வாயிலாக வரும் பணியாளர்கள் SGD $3000-க்கும் அதிகமாக சம்பளம் பெறலாம்.
இதனால் குறைந்த சம்பளம் பெறுபவர்கள் S Pass போன்ற அதிக சம்பளமுள்ள வேலைக்கு மாற விரும்புவர். S Pass-க்கு மாறுவது உங்களின் முயற்சியில் தான் இருக்கிறது, இதற்கு சில செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.
உதாரணமாக, Mechanical Engineering, Civil Engineering, Electrical Engineering போன்ற டிப்ளோமா முடித்தவர்கள், வேலை செய்து கொண்டிருக்கும் போதே தங்களது துறைக்கு ஏற்ற பகுதி நேர Course ஒன்றை தொடர்ந்தால், அதற்கான சான்றிதழ் கிடைக்கும்.
சிங்கப்பூரில் படிப்பது, உங்கள் திறனை மேம்படுத்த உதவும். சம்பளத்தில் குடும்பத்திற்கு அனுப்பி மீதமுள்ள தொகையை உங்கள் முன்னேற்றத்திற்காக சேமிக்கவும். 2-3 ஆண்டுகள் வேலை செய்த பிறகு, சிங்கப்பூரில் உள்ள வேலை தேடல் வெப்சைட்களில் S Pass வேலைகளைத் தேடுங்கள்.
சிங்கப்பூரில் இருந்து நேரடியாகவே JobStreet, JobCentral, MyCareersFuture, Indeed, STJobs போன்ற வேலைவாய்ப்பு தளங்களில் உங்கள் துறைக்கு ஏற்ற S Pass வேலைகளை தேட முடியும்.
அதில் முடியாவிட்டால், நம்பத்தகுந்த ஏஜன்ட்டின் மூலம் S Pass வேலைக்கு முயற்சிக்கவும். S Pass வேலை கிடைத்தால், சிங்கப்பூர் மனிதவள அமைச்சில் (MOM) இருந்து S Passக்கு அங்கீகாரம் பெறுவது அவசியம்.
SGD $500 இலிருந்து SGD $3000 சம்பளத்தை அடைவது எளிதான விடயம் அல்ல. எனவே MOM இல் S Pass விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மீண்டும் முயற்சிக்க வேண்டும். இந்த வழியில் S Pass கொண்டு வேலை செய்பவர்கள் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்.
புதிய நிறுவனத்திற்கு S Pass மூலம் வேலைக்கு செல்லும்போது, முந்தைய பர்மிட்டை ரத்துசெய்ய வேண்டும். மேலும், 2024 இல் வெளிநாட்டு ஊழியர்களுக்கான S Pass கோட்டா குறைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் துறைக்கு ஏற்பக்கூடிய கோட்டாவை கருத்தில் கொண்டு முயற்சிக்கவும்.