உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகே கார் விபத்தில் இருவர் காயம்!
நவம்பர் 22 அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு அருகே நடந்த கார் விபத்தில் இருவர் காயமடைந்தனர். மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து, புக்கிட் திமா எக்ஸ்பிரஸ்வேயில் (BKE) அதிகாலை 12.05 மணியளவில் சோதனைச் சாவடியை நோக்கி நடந்தது.
கார்களில் ஒன்றை ஓட்டிச் சென்ற 36 வயதுடைய பெண்ணும், அதில் பயணம் செய்த எட்டு வயது சிறுவனும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையால் மீட்கப்பட்டபோது இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
முகநூலில் காணொளி ஒன்று இருவழிச் சாலையில் ஒரு சிவப்பு நிற கார் மற்றும் இரண்டு வெள்ளை வாகனங்கள் சிதறிக் கிடப்பதைக் காட்டுகிறது. அந்தச் சிறுவன் சிவப்பு நிறக் காருக்கு அருகில் இரத்தத்துடன் சாலையில் அமர்ந்திருப்பதைக் காணலாம். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.