சிங்கப்பூரில் Shipyard PCM permitல் இருந்து எப்படி S Passக்கு மாறுவது? என்ன செய்ய வேண்டும்!

0

சிங்கப்பூரில் வேலை பெற பலர் ஏஜென்ட் மூலமாக லட்சக்கணக்கான பணம் செலவழிக்கிறார்கள், சிலர் திறன் தேர்வு (Skill Test) மூலம் நேரடியாக வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் பெறும் சம்பளம், அவர்களுக்குக் கிடைக்கும் Pass அல்லது Permit அடிப்படையில் மாறுபடும்.

Shipyard, PCM போன்ற தொழில்துறைகளில் Permit மூலம் வேலைக்கு வரும் பணியாளர்கள் குறைந்த சம்பளத்துடன் வேலை செய்ய நேரிடும். இவர்களுக்கு SGD $500 முதல் SGD $1000 வரை மாத சம்பளம் கிடைக்கலாம். ஆனால், S Pass வாயிலாக வேலை பெறுவோருக்கு SGD $3000 அல்லது அதற்கு அதிகமாக கிடைக்கும். இதனால், குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் பலர், உயர்ந்த சம்பளத்தைக் கொடுக்கும் S Pass வேலைக்கு மாற விரும்புகிறார்கள்.

S Pass வேலைக்கு மாற விரும்புபவர்கள் சில முக்கியமான செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, Mechanical, Civil, Electrical Engineering போன்ற துறைகளில் டிப்ளோமா முடித்தவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்யும் காலத்தில் Part-Time Course செய்து அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் திறன்களை (Skills) மேம்படுத்த முடியும். சம்பளத்தில் இருந்து வீட்டிற்கு அனுப்பும் தொகையை தவிர, தன்னிடம் ஒரு சேமிப்பு வைத்துக்கொள்ளவும்.

சிங்கப்பூரில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வேலை செய்தபிறகு, வேலை தேடும் இணையதளங்களில் (JobStreet, JobCentral, MyCareersFuture, Indeed, STJobs) தங்களுக்கேற்ற S Pass வேலைகளைத் தேட வேண்டும். சிங்கப்பூரிலிருந்தே வேலை தேடுவது அதிக வாய்ப்பு தரும். வெப்சைட் மூலமாக வேலை கிடைக்கவில்லை என்றால், நம்பகமான ஏஜென்ட்டின் உதவியுடன் முயற்சி செய்யலாம். ஆனால், பணம் கொடுக்கும் முன் அவர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

S Pass வேலை கிடைக்கும் போது, மனிதவள அமைச்சில் (MOM) இருந்து Approval கட்டாயம் பெற வேண்டும். SGD $500 சம்பளத்திலிருந்து SGD $3000 சம்பளத்துக்கு மாறுவது எளிதான காரியம் அல்ல. MOMல் S Pass விண்ணப்பம் நிராகரிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால், மீண்டும் முயற்சி செய்வது முக்கியம். பலர் இந்த முறையில் S Pass பெறும் வெற்றியை அடைந்துள்ளனர்.

புதிய நிறுவனத்தில் S Pass வேலைக்குச் செல்லும் முன், முந்தைய Permit ஐ ரத்து (Cancel) செய்ய வேண்டும். மேலும், 2025 முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கான S Pass Quota குறைக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களது துறையில் உள்ள Quota நிலைமையை கருத்தில் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.