இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி(47) கொழும்பில் காலமானார்!
புற்று நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் ஆயுள்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடக்க இருந்த இசை நிகழ்வுக்காக இளையராஜா வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் , இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.