சிங்கப்பூரில்பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்வது? இதோ முழு தகவல்களும்

0

நீங்கள் ஒரு இந்திய பிரஜையாக சிங்கப்பூரில் உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதா கீழ்க்கண்ட படிகளை பின்பற்றுங்கள்.

முதலில், உடனே உள்ளூர் போலீசில் பாஸ்போர்ட் காணாமல் போனது பற்றி புகார் அளித்து, அதற்கான புகார் நகலைப் பெறுங்கள். அதன் பின்னர், உங்கள் பாஸ்போர்ட்டை மாற்ற அல்லது அவசர சான்றிதழ் (EC) பெற சிங்கப்பூரில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை அணுகுங்கள் .

இதற்கான ஆவணங்களாக
போலீஸ் புகார் நகல், மாற்றுப் பாஸ்போர்ட் அல்லது அவசர சான்றிதழுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், இந்திய குடியுரிமையின் சான்றுகள் (ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டை), இழந்த பாஸ்போர்ட் இருந்தால் அதன் நகல், நான்கு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (வெள்ளை பின்னணியுடன்), சிங்கப்பூர் வசிப்பிடச் சான்றுகள் (Work permit) மற்றும் employment pass, dependent pass, அல்லது long-term visit pass உயர்ஸ்தானிகராலயம் கோரிய மேலதிக அடையாள ஆவணங்கள்.

விண்ணப்பங்கள் நேரடியாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்திய உயர்ஸ்தானிகராலயம், 31 கிரேஞ்ச் சாலை, சிங்கப்பூர் 239702 என்ற முகவரிக்கு சென்று, திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இணையதளம் Indian High Commission in Singapore

மாற்றுப் பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் SGD 150, அவசர சான்றிதழ் கட்டணம் SGD 15. பாஸ்போர்ட் சேவைகளுக்கான BLS இன்டர்நேஷனல் சேவையைப் பயன்படுத்தினால் கூடுதல் சேவை கட்டணம் கிடைக்கலாம். மாற்றுப் பாஸ்போர்ட் சுமார் 4-6 வாரங்களில் பெறலாம், ஆனால் அவசர சான்றிதழ் 2-3 வேலை நாள்களில் வழங்கப்படும், இது உடனடி இந்தியா திரும்ப பயணத்திற்கு ஏற்றது.

அனைத்து ஆவணங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துங்கள். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை சரிபாருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.