இந்தியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாமல் இரண்டு நாடுகளுக்கு செல்லலாம் என அறிவித்துள்ளன.தற்போது, கென்யா மற்றும் ஈரான் நாடுகள் இந்தியர்கள் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கின்றன.
முன்னதாக, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் விசா தேவை இல்லை என்று அறிவித்தன.
இந்திய குடிமக்கள் இப்போது கென்யா மற்றும் ஈரானுக்கு தங்கள் பாஸ்போர்ட்டுடன் மட்டுமே செல்ல முடியும்.
கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ, இந்த ஆண்டு முதல் கென்யாவுக்குள் நுழைய சுற்றுலாப் பயணிகள் விசா தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்தியா உட்பட சுமார் 33 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா அனுமதி தேவையில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது.