போதையில் இருந்த பெண்களை ஏமாற்றி பாலியல்வன் கொடுமை குற்றவாளிக்கு சிறைத்தண்டனை!
போதையில் தத்தளித்த நிலையில் வீடு திரும்ப வாகனம் கிடைக்காத இரண்டு பெண்களிடம் உதவுவதாக நடித்து ஏமாற்றிய நபர், அவர்களில் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 35 வயது சிங்கப்பூரரான லீ கிட் என்பவருக்கு, 20 மாத சிறைத்தண்டனையும், நான்கு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் குற்றம் நடந்த இடம் ஆகியவற்றை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அவற்றின் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
தீர்ப்பின்படி, ஜனவரி 30, 2021 அன்று, லீ கிட் தனது நண்பருடன் ‘சில்லவுட்’ செய்வதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் போதையில் இருந்த இரண்டு பெண்களை கவனித்துள்ளனர்.
அந்த பெண்களை அவர்களது வீடுகளில் கொண்டு விடுவதாக ஆசைவார்த்தை கூறி பின்தொடர்ந்துள்ளனர். பயணத்தின் போது, பெண்கள் வாந்தி எடுத்ததன் மூலம் அவர்களின் போதையின் தீவிரம் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்றதும், லீ-யின் நண்பர் நினைவற்று கிடந்த அவளது தோழியின் அருகில், சுயநினைவு இன்றி தவித்த அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை லீ பார்த்துள்ளார்.
பின்னர், லீயும் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார், பெண் ‘வேண்டாம்’ என்று முனகியதும் நிறுத்தியுள்ளார்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தாக்குதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் மன அழுத்தம், கனவுகளில் தொந்தரவு, நினைவுகளின் தாக்கம் போன்ற மன உளைச்சல்களால் அவதிப்பட்ட விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
லீயின் பங்கு குறைவாக இருந்தது என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டாலும், பெண்களை பின்தொடர்வது, அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வது, படுக்கையறைக்குள் நுழைவது போன்றவை ‘லீ-யும் இந்த கொடூரத்தில் தீவிரமாக பங்கேற்றார்’ என்பதை காட்டுகிறது என்று நீதிபதி வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை உணர்ந்திருந்தும், சம்பவத்தின் போது அவரைப் பற்றி மனமில்லாமல் லீ பேசியது, ‘இது ஒரு நொடிப்பொழுதில் நடந்த தவறு’ என்ற வாதத்தை நீதிபதி நிராகரிக்க வழிவகுத்தது.
ஆதாரம் cna