சிங்கப்பூரில் கடும் வெயில் வெப்பநிலை புதிய உச்சம்!

0

கடந்த மார்ச் 24ஆம் தேதி, சுவா சூ காங் பகுதியில் பதிவான 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பமே, சிங்கப்பூரில் இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்பநிலை.

ஏற்கனவே மார்ச் 13 அன்று 36 டிகிரி செல்சியசை செந்தோசா பதிவு செய்திருந்தது. கடந்த 2023ஆம் ஆண்டை விட, இந்த ஆண்டு வெயில் இன்னும் கொடுமையாக இருக்குமென சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நினைவிருக்கட்டும், 1929-ல் இருந்து புள்ளிவிவரங்கள் பராமரிக்கப்பட்ட பிறகு, 2023ஆம் ஆண்டுதான் வெப்பத்தின் அடிப்படையில் சிங்கப்பூரின் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

மே 13, 2023 அன்று, ஆங் மோ கியோவில் வெப்பம் 37 டிகிரி செல்சியசை தொட்டது. இது மே மாதத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாகும். ஏப்ரல் 17, 1983ல் சிங்கப்பூரில் பதிவான அதிகபட்ச வெப்பத்திற்கு இது சமமாக கருதப்படுகிறது.

இந்த மார்ச் மாதத்தில், பொதுவாக வெப்பம் 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிறது. வானம் தெளிந்த நாட்களில் இது மேலும் கூட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, மலேசியாவில் தீவிர வெப்ப அலை நிலவி வருகிறது. அதன் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துவிட்டார்; 27 பேர் வெப்பத்தால் ஏற்படும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வெப்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை எச்சரிக்க, மலேசியா முழுவதிலும் பல்வேறு பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கவனம் தாகமாக இல்லாவிட்டாலும், தண்ணீர் நிறைய குடித்து, அதிக வெயிலில் அலையாமல் இருப்பது நல்லது!

Leave A Reply

Your email address will not be published.