ஜொகூர் வீதி விபத்து: கணவர் உயிரிழப்பு, மனைவிக்கு காயம்!
ஜொகூரில் உள்ள யோங் பெங்கில் போக்குவரத்து விளக்கு சந்திப்பில் கார் மோதியதில் 33 வயது ஆண் ஒருவர் இறந்தார், அவரது மனைவி காயமடைந்தார்.
காலை 10.30 மணியளவில் போக்குவரத்து விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்பட்டது. 20 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற SUV வாகனமும், தனது 31 வயது மனைவியுடன் சென்ற 33 வயது நபர் ஓட்டிச் சென்ற பிக்கப் டிரக்கும் விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த முஹம்மது சுஃபாத் பின் சோபாக்கின் என்ற டிரக் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிக்கு இடது கை முறிந்து, காலில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்யூவி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.