உலக சாதனை படைத்த லலித் முகமெங்கும் முடி!

0

18 வயதான இந்திய இளைஞர் லலித் பட்டிதார், அதிகமான முகமுடியுடன் உலக சாதனை படைத்துள்ளார். ஹைப்பர்டிரைகோசிஸ் என்ற அரிய உடல்நிலை காரணமாக, அவரது முகத்தின் 95%க்கும் அதிகமான பகுதி முடியாக காணப்படுகின்றது . கின்னஸ் உலகச் சாதனையின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் இந்த நிலைமை கொண்டவர்கள் சுமார் 50 பேரே உள்ளனர்.

லலித் தனது பள்ளிப் பருவ நாட்களில் எதிர்கொண்ட சவால்களை பகிர்ந்துக்கொண்டார். “முதலில், என் தோற்றத்தைக் கண்டதும் சக மாணவர்கள் பயந்துவிட்டார்கள். ஆனால் எனக்குத் தெரிந்துகொண்டு, என்னுடன் பேச ஆரம்பித்த பிறகு, நான் அவர்களைப் போன்று ஒருவன் என்பதைக் புரிந்துகொண்டார்கள்,” என்று கூறினார். காலப்போக்கில், அவரது தோழர்கள் அவரை அவரது தனித்துவத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.

சிலர் அவரை வித்தியாசமாக பார்த்தாலும், பெரும்பாலான மக்கள் அவரிடம் நல்ல மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார்கள் என்று லலித் கூறுகிறார். மக்களின் அணுகுமுறை அவர்களின் எண்ணக்கருத்தினைப் பொருத்தே மாறுபடுகிறது. தனது சவால்களைத் தைரியமாக எதிர்கொண்டு, தனக்கே உரிய தனித்துவத்தை கொண்டாடுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.