போதைப்பொருள் தடுப்புப் பிரிவு CNB நடவடிக்கையில் பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல்!
சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) இரண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெரிய அளவில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது.
முதல் நடவடிக்கையில், அதிகாரிகள் ஹேவ்லாக் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சோதனை நடத்தி, 21 வயது பெண் மற்றும் 50 வயது ஆணை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஹெராயின், எக்ஸ்டசி மாத்திரைகள், மெத்தாம்பெட்டமின் போன்ற போதைப்பொருட்களும், சிங்கப்பூர் மற்றும் மலேசியா பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே ஹோட்டலின் பார்க்கிங் பகுதியில் சந்தேக நபர்கள் பயன்படுத்திய காரை சோதனை செய்ததில், மேலும் மூன்று கிலோ ஹெராயின் மற்றும் 500 கிராம் மெத்தாம்பெட்டமின் கண்டுபிடிக்கப்பட்டன.
இதற்குப் பிறகு, அதிகாரிகள் காகி புக்கிட் பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் 27 வயது பெண் மற்றும் 33 வயது ஆணை கைது செய்தனர். அங்கு சுமார் ஐந்து கிலோ கஞ்சா, எக்ஸ்டசி மாத்திரைகள், மெத்தாம்பெட்டமின், எல்எஸ்டி ஸ்டாம்புகள் மற்றும் மின் சிகரெட் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, சுமார் S$620,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
CNB, சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.