டோட்டோவில் அதிர்ஷ்டம் $12.83 மில்லியன் ஜாக்பாட் பரிசு வெல்ல பட்டது!
ஜூலை 31 அன்று நடைபெற்ற டோட்டோ குலுக்கலில், ஒரு அதிர்ஷ்டசாலி சுமார் $12.83 மில்லியன் பரிசை வென்று, டோட்டோ வரலாற்றிலேயே மிகப்பெரிய தனிப்பட்ட ஜாக்பாட் வெற்றியாளராகக் கருதப்படுகிறார்.
இது, ஜூன் 19 அன்று தனி நபர் ஒருவர் வென்ற $12.32 மில்லியன் சாதனையை முறியடித்துள்ளது.
இந்த மெகா பரிசு ஆன்லைனில் வாங்கப்பட்ட QuickPick சாதாரண டிக்கெட்டுக்குத் தட்டிச் சென்றது. அதாவது, வாங்கியவர் எண்களைத் தேர்ந்தெடுக்காமல், கணினியே தானாக தேர்வு செய்தது.
வெற்றி எண்கள் 7, 19, 20, 21, 22, 29, கூடுதல் எண் 37. இதில் 19 முதல் 22 வரையிலான நான்கு எண்கள் தொடர்ச்சியாக வந்திருப்பது, டோட்டோ வரலாற்றிலேயே ஒரு தனிச்சிறப்பு.
இதே குலுக்கலில், 20 டிக்கெட்டுகள் இரண்டாம் பரிசு வென்று, ஒவ்வொன்றும் சுமார் $73,408 பெற்றன. கடந்த மூன்று குலுக்கல்களில் யாரும் முதல் பரிசை வெல்லாததால், ஜாக்பாட் தொகை $1.2 மில்லியனில் இருந்து $5.8 மில்லியன் வரை உயர்ந்தது.
இது 2025ஆம் ஆண்டு டோட்டோ ஜாக்பாட் $10 மில்லியனைத் தாண்டும் எட்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்கள் Singapore Pools இணையதளத்தில் காணலாம்.