சிங்கப்பூரில் நூதன முறையில்வரி செலுத்தப்படாத சிகரெட் பைக்கில் கடத்த முயன்ற மலேசியர் கைது!
செப்டம்பர் 30 ஆம் தேதி, மலேசியாவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர், தனது மோட்டார் பைக்கில் சிங்கப்பூருக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
சோதனையின்போது, அதிகாரிகள் அந்த பைக்கின் பக்கவாட்டுப் பலகைகளுக்குள் (side panels) கருப்பு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.
சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ICA) வெளியிட்ட வீடியோ ஒன்றில், அதிகாரிகள் இந்த சிகரெட் பாக்கெட்டுகளை வெளியே எடுக்கும் காட்சிகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.
இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் (Singapore Customs) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எல்லைகளில் சந்தேகத்திற்குரிய பயணிகள் மற்றும் வாகனங்களை எளிதில் அடையாளம் காண, நவீன தொழில்நுட்பம் மற்றும் தகவல் பகுப்பாய்வைப் பயன்படுத்துவோம் என ICA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.