பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் பெரும் விபத்து காணொளி பரபரப்பை ஏற்படுத்துகிறது!
மார்ச் 2 ஆம் தேதி, ஸ்டீவன்ஸ் சாலை விலக்குக்கு அருகில், துவாஸ் நோக்கிச் செல்லும் பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் பெரிய விபத்து நடந்துள்ளது. இதில் ஒன்பது கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டு பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளன.
மாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. 59 வயதான ஆணும், பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்து நடந்த அதே நாளில் இந்தக் காணொளி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. வெறும் 18 வினாடிகள் ஓடக்கூடிய இந்த காணொலி, விபத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
Image sgrv/facebook