CareersFinder ஐ அறிமுகப்படுத்தும் மனிதவள அமைச்சகம். இனி குறைந்த செலவில் சிங்கப்பூர் வேலைக்கு செல்லலாம்

0

சிங்கப்பூரில் பல வேலை அனுமதிப் பத்திரங்களைப் பயந்படுத்தி வேலை செய்ய முடியும். PCM முதல் SPass, EPass வரை, பல பாஸ் முகவர்கள் 3-5 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். 

இந்திய ஏஜென்ட் மற்றும் சிங்கப்பூர் ஏஜென்ட் ஆகிய இருவருக்கும் ஊழியர்கள் வேலைக்கு வருவதற்கு முன் நிறைய பணம் கொடுக்க வேண்டுமாக உள்ளது.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்றில் வேலைக்குப் பதிவு செய்து, நேர்காணலுக்குப் பிறகு வேலையைப் பெற்றால், உங்கள் செலவுகள் அனைத்தும் குறைவடையுமென கூறப்படுகிறது. ஆனால் அந்த வேலையைப் பெற உங்களுக்கு நிறைய நேரம் தேவைப்படும். 

சிங்கப்பூரில் Driving வேலைக்கு எப்படி வருவது? இந்திய Driving Licence உடன் வாகனம் ஓட்டலாமா?

நீங்கள் பொறுமையாக இருந்து சரியான விண்ணப்பத்தை அனுப்பினால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

SPass-ல் வேலைக்கு ஆட்களை அமர்த்த விரும்பினால், MyCareersFuture இணையதளத்தில் 14 நாட்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும். 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் MyCareersFuture தளத்தில் புதிய CareersFinder அம்சத்தை அறிமுகப்படுத்த MOM திட்டமிட்டுள்ளது.

சில சிங்கப்பூரர்கள் தங்களின் வேலை வாய்ப்புகள் மற்றும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவது பற்றி மேலும் அறிய விரும்புவதால், வேலை வாய்ப்புகள் மற்றும் திறன்கள் பரிந்துரை அம்சம் உருவாக்கப்பட்ட உள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

Workforce Singapore (WSG) ஏற்கனவே உள்ள MyCareersFuture போர்ட்டலில் CareersFinder சேர்க்கப்படும். இது ஏற்கனவே போர்ட்டலில் உள்ளதை விட கூடுதலாகும். வேலைகளுக்கான திறன்களுடன் பொருந்தக்கூடிய தொழில்நுட்பம், அரசாங்க உதவிக்கான Filter மற்றும் MyCareersFuture மூலம் இயங்கும் Workpedia உள்ளது.

இந்த அம்சத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதனுடன், புதிய வேலையைத் தேட விரும்பும் ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

சிங்கப்பூரில் போலி ஏஜன்சி மூலம் ஏமாறாமல் மனிதவள அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட ஏஜன்சிகளை அறிந்து கொள்ளுங்கள்

அருகிலுள்ள பணியிடங்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள அல்லது வேலைகளை மாற்ற விரும்பும் ஊழியர்களுக்கு இது உதவுகிறது.

CareersFinder திறன்கள் மற்றும் வேலை மாற்றங்கள் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி மக்களுக்கு வேலை தேட உதவுகிறது.

அவர்களின் சொந்த சுயவிவரங்களின் அடிப்படையில், இந்த அம்சம் பயனர்களுக்கு சாத்தியமான வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உதவும். மேலும், சரியான பயிற்சி திட்டங்கள் பரிந்துரைக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.