புதிய தொழில்நுட்பம் அதிவேக வாகன ஓட்டுநர்களை காரின் தகவல்களைக் கொண்டு கைது செய்யும் சிங்கப்பூர் போலீஸ்!
சிங்கப்பூரில், முதல் முறையாக, காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் (infotainment system) இருந்த தகவல்களை வைத்து, அதிவேகமாக வண்டி ஓட்டிய பெண்ணை போலீசார் பிடித்துள்ளனர்.
அந்தப் பெண்மணிக்கு 5 நாட்கள் சிறைத்தண்டனையும், 2 வருடங்களுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன வாகன தடயவியல் கருவி (vehicle forensics tool), 2024ம் ஆண்டு காவல்துறை பணித்திட்ட கருத்தரங்கில் (Police Workplan Seminar) அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஆண்டிலேயே முழுமையாகப் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
2022ம் ஆண்டு, போலீசாரின் சைபர் குற்றப்பிரிவு (Cybercrime Command) போக்குவரத்து போலீசாருக்கு உதவியது. அந்தப் பெண்மணியின் காரில் இருந்த தகவல்களை (call logs, messages, GPS data) சேகரித்தனர். இதன் மூலம் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு, ஜனவரி 2023ல் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், காரின் ஓன்-போர்டு டயக்னாஸ்டிக் (On-Board Diagnostics – OBD) போர்ட் மூலம் தகவல்களைச் சேகரிக்கும் வழிகளையும் போலீசார் உருவாக்கி வருகின்றனர். விசாரணைகளுக்கு உதவும் வகையில், காரின் இருப்பிடம் மற்றும் ஓட்டுநர் முறை பற்றிய விரிவான தகவல்களை இது வழங்கும்.
இந்த வாகனத் தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டுமே அணுக முடியும், மேலும் அது குற்றவியல் விசாரணைகளுக்கு மட்டுமே.
இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த, ஹோம் டீம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புடன் (Home Team Science and Technology Agency) போலீசார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் மின்சார வாகனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்வதும் அடங்கும்.