தெற்காசியாவில் இயல்பை மீறிய வெயிலின் தாக்கம்! ராஜஸ்தானில் 9 பேர் உயிரிழப்பு!

0

தெற்காசிய நாடுகளை வறுத்தெடுக்கும் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மேர் பகுதியில் 48.8°C என்ற அதிக அளவு வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், வெப்ப அலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தகைய கடும் வெப்பநிலைக்கு, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றமே முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வழக்கத்தை விட மிகக் குறைவான மழைப்பொழிவும், வலுவிழந்து வரும் எல் நினோ நிகழ்வும் இந்த ஆண்டு வெப்ப அலைகள் அதிகரிக்க வழிவகுக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதேபோல், பாகிஸ்தானில் 26 மாவட்டங்கள் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் வெப்பநிலை 50°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிந்து மாகாணத்தில் பள்ளித் தேர்வுகள் கூட இந்த வெப்பத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வங்கதேசத்திலும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் ‘ரேமால்’ புயல் தாக்க உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த புயல் ஞாயிற்றுக்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில், கேரள மாநிலத்தில் அதிகளவு பருவமழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது. இது இயல்பை விட 18% அதிகமாகும். இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.