புதிய Work Pass அறிமுகம்: சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

0

புதிய Work Pass (Overseas Networks & Expertise Pass) அறிமுகம் செய்யப்படலானது சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது. 

நல்ல திறமையாளர்களை சிங்கப்பூர் கவர்வதை நோக்கமாக கொண்ட இத் திட்டம்

சிங்கப்பூர் அரசின் ஒரு புதிய முயற்சியாகும்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் புதிய Work Pass அனுமதி விண்ணப்பங்ககள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப் பட்டுள்ளது. 

புதிய Overseas Networks & Expertise Pass வைத்திருப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்ய முடியுமெனவும் எந்த நேரத்திலும் சிங்கப்பூரில் பல நிறுவனங்களைத் தொடங்கவும் முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் S$30,000 நிலையான மாத சம்பளம் பெறுபவராக இருக்க வேண்டும்.

அதன்போது நிறுவனங்களை இயக்கவும் மற்றும் வேலை செய்யவும் முடியும் என்பது மேலதிகமாக கூறப்பட்டுள்ளது. 

மேலும் விண்ணப்பதாரி குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மூலதனம் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். இல்லாவிடின் குறைந்தபட்சம் 200 மில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர வருவாய் ஈட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.