லண்டனில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் காற்றலைச் சுழலில் சிக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றவர்கள் காயமடைந்தனர்!

0

லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர், விமானம் திடீரென காற்றலைச் சுழலில் சிக்கியதில் உயிரிழந்தார்.

இந்த விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த சம்பவத்தால் விமானம் தனது பயணத்தைத் தொடராமல் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

வானில் சுமார் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போயிங் 777-300ER ரக விமானம், திடீரென ஏற்பட்ட காற்றலைச் சுழலில் சிக்கி 3 நிமிடங்களில் 31,000 அடி உயரத்திற்குக் கீழிறங்கியது.

பின்னர் அடுத்த 10 நிமிடங்களுக்கு அதே உயரத்தில் பறந்த விமானம், படிப்படியாகக் கீழிறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் தரையிறங்கியது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், விமானத்தில் காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்த பயணியின் குடும்பத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கு தாய்லாந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அறிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.