விமானியின் துணிச்சலான நடவடிக்கை – 145 பயணிகள் உயிர் காப்பாற்றப்பட்டனர்!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து புதன் காலை 11.55 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று 145 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட இருந்தது. புறப்படும் முன் இறுதிச் சோதனையின் போது, எரிபொருள் கசிவைக் கண்டறிந்த விமானி, விமானத்தை உடனடியாக நிறுத்தினார்.
பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பிரச்னையை சரி செய்தனர். பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தொழில்நுட்ப பிரச்சனை தீர்க்கப்படும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
விமானியின் விரைவான நடவடிக்கைக்கு பின் 145 பயணிகளும் பாதுகாப்பாக இருந்தனர். இந்த பிரச்சனை முழுமையாக தீர்க்கப்பட்டது.