மரின் கிரசென்ட் பகுதியில் 11 வயது சிறுவன் மாயம் பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை!
மரின் கிரசென்ட், புளோக் 29 அருகே நேற்று (ஆகஸ்ட் 29) காலை சுமார் 11.05 மணியளவில் 11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். ஆட்டிசம் குறைபாடுள்ள இந்தச் சிறுவனைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல் போன சிறுவனின் பெயர் முஹம்மது ஹைரில் பின் முஹம்மது எஃபெண்டி. அவன் கடைசியாகக் காணப்பட்டபோது, மேலே சட்டை அணியாமல் சாம்பல் நிறக் கால்சட்டை மட்டும் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவனைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது எங்கேயாவது பார்த்தாலோ, உடனடியாக காவல்துறையின் அவசர எண்ணான 1800-255-0000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையதளத்திலும் தகவல் அளிக்கலாம்.