Work Permit இல் சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்களுக்கான கட்டுப்பாடுகள்

0

வெளிநாட்டு தொழிலாளர்கள் Work Pass இல் சிங்கப்பூர் வரும்போது, அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதை அறிந்து சிங்கப்பூரில் வேலை தேடுங்கள்.

வேலை விசாவில், Diploma மற்றும் Degree பெற்றவர்களும் பெறாதவர்களும் சிங்கப்பூருக்குப் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்காக ஏராளமான துறைகள் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த துறையில் நீங்கள் டெஸ்ட் அடித்து கொண்டு வர முடியும்.

பொதுவாக, Work Pass இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 

உங்களை பணியமர்த்திய நிறுவனத்துடன் மட்டுமே நீங்கள் வேலை செய்ய வேண்டும். வேறு எந்த நிறுவனத்துடனும் வேலை செய்யாதீர்கள். மீறும் பட்சத்தில் தண்டனையும் கிடைத்து தண்டப்பணமும் செலுத்த நேரிடலாம்.

நீங்கள் பணிபுரியும் நிறுவனம், உங்களுக்கு Work Pass வழங்க, கீழ்வரும் நடைமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.

சட்டப்பூர்வ Work pass உள்ளவர்களை மட்டுமே பணியில் அமர்த்தப்பட வேண்டும், மேலும் MOM அறிக்கைகளின்படி சம்பளம் வழங்கவும்.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரின் மருத்துவப் பரிசோதனைக்கு ஊழியர்களை அனுப்ப வேண்டும். அவர்கள் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் என உறுதி செய்யப்பட்டால், Work permit ரத்து செய்யப்பட வேண்டும்.

பணியாளர்களுக்கான தங்குமிடங்கள் பொருத்தமானவையா என்பதை நிறுவனத்தின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். சில வணிகங்கள் தங்குமிடங்களையும் வழங்கலாம்.

வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் பின்வருவனவற்றில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறார்கள்:

வேலை அனுமதி அட்டையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனத்திற்கு மட்டுமே வேலை செய்யுங்கள். வேறு எந்த நிறுவனத்திலும் வேலை செய்யாதீர்கள் அல்லது சொந்தமாகத் தொடங்காதீர்கள்.

மனிதவள அமைச்சு ஒப்புதல் இல்லாமல், சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிப்பவரை திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

உங்கள் பணி அனுமதி அட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்கவும். ஏனெனில் அரசு அதிகாரி கேட்கும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு தொடங்கும் போது முதலாளி வழங்கிய முகவரியில் மட்டுமே வசிக்கவும். இடமாற்றம் செய்ய விரும்பினால், தங்கள் முதலாளிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.