சிங்கப்பூர் பட்ஜெட் 2024 உடனடி உதவிகள் மற்றும் நீண்ட கால முதலீடுகள்

0

சிங்கப்பூர் பட்ஜெட் 2024 மூன்று முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது. முதலில், உடனடி நிதி உதவி மற்றும் வரிச் சலுகைகள். உதாரணமாக, ‘அஷ்யூரன்ஸ் பேக்கேஜ்’ மூலம் அதிகரித்த வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க கூடுதல் மானியங்கள் வழங்கப்படும். மேலும், $200 வரை தனிநபர் வருமான வரிச் சலுகை (50%) கிடைக்கும். இவை தற்போதைய கவலைகளை நேரடியாக நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள்.

அடுத்து, குறிப்பிட்ட நடைமுறைகளை ஊக்குவிக்கவும், கொள்கைகளின் குறைபாடுகளை சரிசெய்யவும் திட்டங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மத்திய சேமநிதித் திட்டத்தில் (CPF), சிறப்பு கணக்கு என்பது ஓய்வூதிய கணக்கு அல்லது சாதாரண கணக்கு இவற்றுடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் நீண்ட கால சேமிப்புக்காக வழங்கப்படும் அதிக வட்டியை, வழக்கமான பணம் வைக்கும் கணக்கைப் போல் பயன்படுத்தும் ஒரு வழக்கத்தை, பணக்காரர்கள் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.