சிங்கப்பூர் வேலைவாய்ப்பு பாஸ் விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் தேவைகளை அதிகரிக்கிரது!
அடுத்த ஆண்டு (2025) முதல், புதிய வேலை அனுமதி (Employment Pass) விண்ணப்பங்களுக்கு தேவையான குறைந்தபட்ச மாத சம்பளம் 5,000 வெள்ளியிலிருந்து 5,600 வெள்ளியாக உயர்த்தப்படும்.
நிதி சேவை சார்ந்த நிறுவனங்களில், இந்த குறைந்தபட்ச ஊதியம் 5,500 வெள்ளியிலிருந்து 6,200 வெள்ளியாக உயரும். இந்த மாற்றங்களை மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
வேலை அனுமதி பெற்றவர்கள் அவர்களின் அனுமதியை புதுப்பிக்கும் போது (ஜனவரி 1, 2026 முதல்) இந்த புதிய குறைந்தபட்ச ஊதியம் அமலுக்கு வரும்.
Singapore Work Permitக்கான தகுதிகள் மற்றும் அடிப்படை சம்பளம் பற்றி தெரியுமா?
இதற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 2022-ல், புதிய வேலை அனுமதி பெற குறைந்தபட்ச ஊதியம் 500 வெள்ளியிலிருந்து உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம்.
சந்தையில் நிலவும் ஊதிய விகிதங்களை பிரதிபலிக்கும் வகையில் குறைந்தபட்ச ஊதியத்தை அவ்வப்போது சரிசெய்வது அவசியம் என்று டாக்டர் டான் வலியுறுத்தினார்.
இத்தகைய மாற்றங்கள் உள்நாட்டு ஊழியர்களின் ஊதியத்துடன் வெளிநாட்டு ஊழியர்களின் ஊதியத்தையும் சமநிலையில் வைக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் வாசிக்க…