சிங்கப்பூரில் SingPass மோசடி அதிகரிப்பு SingPass மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது?

0

சிங்கப்பூரில், SingPass விவரங்களை திருடுவதற்காக போலி வேலைவாய்ப்புகளை காட்டி மோசடி செய்பவர்களைப் பற்றி காவல்துறை எச்சரிக்கிறது. ஜனவரி 1 முதல் இதுவரை 47 பேர் ஏற்கனவே இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.

மோசடி செய்பவர்களின் உத்தி டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் போலி வேலை விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

வேலைகளில் ஆர்வம் காட்டுபவர்களிடம், அவர்களின் SingPass கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை மாற்றும்படி கூறுகிறார்கள்.

அதை செய்த பிறகு, SingPass கடவுச்சொல் மற்றும் அடையாள அட்டை எண்ணையும் கேட்பார்கள். இந்த விவரங்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்கள் பல வங்கிக் கணக்குகளைத் தொடங்க முடியும்.

பாதுகாப்பாக இருக்க: SMS அல்லது சமூக ஊடகங்கள் வழியாக அனுப்பப்படும் SingPass உள்நுழைவு இணைப்புகளை (links) ஒருபோதும் சொடுக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

முன்பின் தெரியாதவர்களிடம், இணையத்தில் நம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.