ஐக்கிய அரபு அமீரகம் துபாய் விசா 5 நாட்களில்! புதிய ‘வொர்க் பண்டில்’ (Work Bundle) தளம் அறிமுகம்!

0

துபாய்க்கான விசா விண்ணப்ப நடைமுறையை எளிதாக்கும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகம் புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘வொர்க் பண்டில்’ (Work Bundle) என்று அழைக்கப்படும் இந்த தளம், வேலை அனுமதி (work permit), குடியிருப்பு விசா போன்ற விசாக்களின் விண்ணப்ப செயல்முறைகளை நெறிப்படுத்துகிறது.

இதுவரை 16 ஆவணங்களும், 30 நாட்கள் காத்திருக்கும் நிலையும் இருந்த நிலையில், இனி 5 ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வெறும் 5 நாட்களில் துபாய் விசாவை பெறலாம்.

இந்த புதிய முறை விசா பெறுவதற்கான நேரத்தையும் முயற்சியையும் வெகுவாக குறைக்கிறது. முன்பெல்லாம், பலமுறை நேரில் சென்றுவர வேண்டியிருந்த நிலை மாறி, இப்போது வெறும் இரண்டு நாட்களில் இந்த விசா விண்ணப்பப் பணிகளை முடிக்கலாம்.

விரைவாக, எளிமையாக துபாய் வருவதையும், இங்கு தங்குவதையும் நோக்கமாகக் கொண்டு ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

‘இன்வெஸ்ட் இன் துபாய்’ (Invest in Dubai) தளத்தின் மூலம் துபாயில் இந்த முயற்சி தொடங்கப்படவுள்ளது.

படிப்படியாக இது அரசின் மற்ற டிஜிட்டல் தளங்களிலும் விரிவுபடுத்தப்படும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிகாரத்துவ சிக்கல்களை குறைத்து, துபாய்க்கு வேலை மற்றும் சுற்றுலா வாய்ப்புகளுடன் வருபவர்களின் அனுபவத்தை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் முனைப்பு காட்டுகிறது.

Leave A Reply

Your email address will not be published.