தஞ்சோங் கட்டோங் சாலையில் பெண்ணை குழியில் இருந்து காப்பாற்றிய தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு பாராட்டு.
தஞ்சோங் கட்டோங் சாலையில் ஏற்பட்ட குழியில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய
பிச்சை உடையப்பன் சுப்பையா வேல்முருகன், சரவணன்,அஜித்குமார்,வீரசேகர்,சந்திரிசேகரன் மற்றும் ராஜேந்திரன் ஏழு தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பாராட்டப்பட்டனர்.
அவர்களுக்கு மனிதவள அமைச்சகத்தின் இணை அமைச்சர் தினேஷ் வாசு தாஷ் MOM Appreciation Coin எனப்படும் சிறப்பு நாணயங்களை வழங்கி கௌரவித்தார்.
ஜூலை 28 அன்று வேலை முடிந்த பிறகு அமைச்சர் அவர்கள் தங்கும் விடுதிக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். சிலர் மேலதிக நேரம் வேலை செய்துவிட்டு வந்திருந்தபோதும், அனைவரையும் சந்திக்க முடிந்தது. அமைச்சர் அவர்கள் செயல்களுக்காக அவர்களை பாராட்டினார்.
சம்பவம் நடந்தபோது, பணித் தலைவர் சுப்பையா காரின் விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்தார். கார் குழியில் விழுந்து, பெண் ஒருவர் வெளியேறியிருந்தார். தொழிலாளர்கள் கயிறு வீசி அவரை மேலே இழுத்து காப்பாற்றினர்.
“பயமாக இருந்தது, ஆனால் காப்பாற்றவேண்டியது முக்கியம்,” என்றார் சுப்பையா. அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.