இரண்டாவது இணைப்பு விரைவுச் சாலையில் சிங்கப்பூர் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்!

0

நள்ளிரவில் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலத்தில் (Second Link) நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூரை சேர்ந்த பைக் ஓட்டி உயிரிழந்தார்.

இஸ்கந்தர் புத்திரி (Iskandar Puteri) காவல்துறை அதிகாரி குமாரசன் (Kumarasan) அவர்கள் கூறுகையில், 33 வயதான இவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார். இந்த விபத்து நள்ளிரவு 12.20 மணியளவில் நடந்தது.

இந்த விபத்தினால் சிங்கப்பூரின் துவாஸ் சோதனைச் சாவடியில் வெளியேறும் அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விபத்து நடந்த இடம் சீரமைக்கப்பட்ட பிறகு, அதிகாலை 1 மணியளவில் அனைத்து வழித்தடங்களும் மீண்டும் திறக்கப்பட்டன.

விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியாக வந்த பைக், திடீரென யூ-டர்ன் (U-turn) அடித்த காரின் மீது மோதியதாக தெரிகிறது. காரை ஓட்டி வந்தவர், 40 வயது மதிக்கத்தக்க சாலை பணியின் மேற்பார்வையாளர் ஆவார். அவர் வேறொரு பணிக்காக செல்ல யூ-டர்ன் அடித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.