துவாஸில் சோக விபத்து மோட்டார் சைக்கிள் விபத்தில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு!

0

மார்ச் 27 ஆம் தேதி துவாஸில், ஒரு சரக்கு லாரியுடன் மோதி, 30 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரை பரிதாபமாக இழந்தார்.

துவாஸ் சோதனைச் சாவடி செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மாலை 5:40 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் சிக்கியவர் உடனடியாக ‘ங் டெங் ஃபோங்’ பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் அங்கேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்தின் வீடியோ, ‘ட்ராஃபிக் ஆக்சிடென்ட்ஸ். எஸ்ஜி’ (‘Traffic Accidents.SG’) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ், ஒரு நீல நிற லாரி மற்றும் சேதமடைந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காண முடிகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 27 வயதான லாரி ஓட்டுனர் விசாரணைக்கு உதவி வருகிறார்.

மார்ச் மாதத்தில் மட்டும் நான்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் 8 ஆம் தேதி, பல வாகனங்கள் மோதிய விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்தார்.

மார்ச் 23 அன்று, ஜோகூரில் ஒரு லாரி மோதியதில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் கொல்லப்பட்டனர்; நால்வர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, மார்ச் 28 அன்று போக்குவரத்து போலீசார் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

சாலைகளில் பாதுகாப்பை முதன்மையாக கருத வேண்டும், குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும், வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மார்ச் 21 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 70 சம்மன்கள் வழங்கப்பட்டு 21 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் கைது செய்யப்பட்டனர்.

இது போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
Image the straits times

Leave A Reply

Your email address will not be published.