சிங்கப்பூருக்கு Skill Test அடித்து அல்லது அடிக்காமல் செல்வது என்ன நன்மைகள்? இப்போது எது சிறந்தது!

0

சிங்கப்பூரில் நல்ல வேலை மற்றும் உயர்ந்த சம்பளம் பெற வேண்டும் என்பது அனைவரின் ஆசையும் விருப்பமும் . நாம் எந்த வகையான Pass அல்லது Permit-ல் சிங்கப்பூர் செல்கிறோம், நமது வேலை மற்றும் அனுபவத்தைப் பொறுத்தே சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் செல்லும்போது Skill Test அடித்து செல்லுதல் சிறந்ததா அல்லது அடிக்காமல் செல்லுதல் சிறந்ததா என்ற கேள்வி எங்களுக்குள் அதிகமாகவே உள்ளது. இவற்றுக்கு இடையிலான பல்வேறு வேறுபாடுகளைப் பார்க்கலாம்.

Skill Test அடித்து செல்லும் போது பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக, அதிக சம்பளம், விரைவான பதவி உயர்வு, மற்றும் நாடு திரும்பும்போது குறைவான கட்டணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும், திறமைக்கு ஏற்ற வேலைகளும் விரைவில் கிடைக்கும். எனினும், Skill Test எழுதி அதற்கான முடிவுகளைப் பெறும் காலப்பகுதியே இதன் குறைபாடாகும்.

Skill Test அடித்து செல்லும் போது Work Permit போன்றவைகளைப் பெறுவது சுலபமாக இருக்கும். Skill Test இல்லாமல் சென்றாலும் சிங்கப்பூர் செல்ல முடியும், ஆனால் இதன் நன்மை விரைவாக செல்வதற்கே உதவும்.

அத்தோடு, Skill Test இல்லாமல் செல்லும் போது ஆரம்ப செலவு குறைவாக இருக்கும், ஆனால் Skill Test உடன் செலவின் அளவு அதிகமாகும். இது 5 லட்சங்கள் வரை இருக்கும்.

Skill Test இல்லாமல் S Pass, E Pass, PCM Permit போன்றவற்றில் நீங்கள் சிங்கப்பூர் செல்லலாம். ஆனால், மீண்டும் நாடு திரும்பி மீண்டும் சிங்கப்பூர் செல்லும்போது கூடுதல் செலவுகள் ஏற்படும்.

மேலும், சிங்கப்பூர் வந்து இங்கு Skill Test அடித்து வேலைக்கு மாறலாம். இதற்கு எல்லாம் உங்கள் விருப்பம் மற்றும் சூழ்நிலைப் பொறுத்தது. இரண்டிலும் இருக்கும் நன்மை, குறைபாடுகளை ஆராய்ந்து பொருத்தமான முடிவெடுத்து சிங்கப்பூர் செல்வது சிறந்தது.

Leave A Reply

Your email address will not be published.