சிங்கப்பூரில் Work Permit என்றால் என்ன?அது யாருக்கு அது பற்றிய தகவல்கள்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அனுமதிக்கும் சட்டப்பூர்வ ஆவணமே வேலை அனுமதிச் சீட்டு (Work Permit).
வெவ்வேறு திறன் நிலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கென பலவகையான வேலை அனுமதிச் சீட்டுகள் உள்ளன.
வேலை அனுமதிச் சீட்டு (WP):
கட்டுமானம், உற்பத்தி, கப்பல் போக்குவரத்து, செயல்முறை, மற்றும் சேவை போன்ற துறைகளில் பணிபுரியும் அரை-திறன் (semi-skilled) கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவுக்கு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் (quota) மற்றும் தொழிலாளர் வரியும் (levy) செலுத்த வேண்டும்.
எஸ் பாஸ் (S Pass):
நடுத்தர-திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கானது இந்த ‘எஸ் பாஸ்’. குறிப்பிட்ட கல்வித்தகுதிகள் மற்றும் குறைந்தபட்ச சம்பள வரம்பைப் பெற்றிருத்தல் அவசியம்.
மேலும், சிங்கப்பூரர்களை பணியமர்த்த நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் இதில் நிரூபிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அனுமதிச் சீட்டு (EP – Employment Pass):
நிபுணர்கள், மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் சிறப்புத் திறனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அனுமதிச் சீட்டு இது.
இந்த வகையில் அதிக கல்வித்தகுதிகள் மற்றும் உயர் சம்பளம் அவசியம். நிறுவனத்தின் அளவு மற்றும் சம்பள விவரங்களிலும் தகுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தொழில்முனைவோர் அனுமதிச் சீட்டு (EntrePass):
சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த விரும்பும் வெளிநாட்டு தொழில்முனைவோருக்கானது. வணிகத்தின் புதுமை, முதலீட்டுத் தொகை மற்றும் அவர்களின் முந்தைய வணிக அனுபவங்கள் போன்ற குறிப்பிட்ட தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
தனிநபர் வேலைவாய்ப்பு அனுமதிச் சீட்டு (PEP):
அதிக சம்பளம் வாங்கும் ‘இபி’ அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கும், வெளிநாட்டு நிபுணர்களுக்கும் இந்த ‘பிஇபி’ வசதி உண்டு.
வேலை மாறும்போது, புதிய வாய்ப்புகளைத் தேட சிங்கப்பூரிலேயே ஆறு மாதங்கள் வரை தங்கியிருக்க இந்த அனுமதி உதவுகிறது. இதனால் வேலை தேடுவதில் நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது.
வேலை அனுமதிச் சீட்டுகளுக்கு பல்வேறு விதிமுறைகள் உண்டு. புதுப்பித்தல் தேவைகள், தொழிலாளர் ஒதுக்கீடு, வரிகள் போன்றவற்றைக் கடைபிடிப்பது அவசியம்.
விதிகளை மீறுவது தண்டனைக்குரியது, சில சமயங்களில் அனுமதிச் சீட்டை இழக்க நேரிடலாம். நிறுவனங்கள் இந்த விதிமுறைகளைக் கடைபிடிப்பதுடன், வெளிநாட்டு தொழிலாளர்களும் சிங்கப்பூரின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.