சிங்கப்பூரில் “U-turn worker” என்றால் யார் இதன் பொருள் என்ன?

0

சிங்கப்பூரில், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முறையான வேலை அனுமதி பெற்று சிங்கப்பூருக்குள் வந்த பிறகு, அரசின் ஒப்புதல் இல்லாமல் வேறு நிறுவனத்துக்கு மாறிவிடுவதை “யூ-டர்ன் தொழிலாளர்கள்” (U-turn worker) என்று அழைக்கிறார்கள்.

இந்த மாற்றத்தால் அவர்கள், சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் (MOM) விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படுகிறார்கள்.

பொதுவாக, சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது MOM அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட நிறுவனத்தில், ஒரு குறிப்பிட்ட வேலைக்காக மட்டுமே வேலை அனுமதி வழங்கப்படும். ஆனால், பணிச்சூழல் பிடிக்கவில்லை, வேறு நிறுவனத்தில் அதிக சம்பளம் கிடைக்கிறது போன்ற காரணங்களால் சில தொழிலாளர்கள் வேலை மாற நினைக்கலாம்.

அரசின் ஒப்புதலின்றி இப்படி வேலை மாறினால் அவர்கள் “யூ-டர்ன் தொழிலாளர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள். இது சட்டத்துக்குப் புறம்பானது.

இந்தத் தவறு செய்யும் தொழிலாளர்கள் நாடு கடத்தப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம், அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு சிங்கப்பூர் திரும்பத் தடை விதிக்கப்படலாம்.

“யூ-டர்ன் தொழிலாளர்களை” வேலைக்கு வைத்துக் கொண்டால் அந்த நிறுவனங்களுக்கும் அபராதம், எதிர்காலத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கத் தடை போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் குடிவரவு மற்றும் தொழிலாளர் சட்டங்களை மதிப்பதை நிறுவனங்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.

இந்தச் சட்டவிரோத “யூ-டர்ன் வேலை” முறையைத் தடுக்க, MOM அடிக்கடி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, மேலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களுக்கு அவர்கள் மீது கடுமையான விதிகளையும் விதிக்கிறது.

சிங்கப்பூர் வேலைவாய்ப்புச் சூழலைச் சீராக வைத்திருக்கவும், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஊழியர்கள் இருவரின் உரிமைகளையும் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

Leave A Reply

Your email address will not be published.