இனி வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்ல RMI சான்றிதழ் கட்டாயமாகிவிடுமா? யாரெல்லாம் எடுக்க வேண்டும்? எப்படி எடுப்பது?
சிங்கப்பூருக்கு வேலைக்கு வருகிற பலரும் நல்ல கல்வித் தகைமைகளை பெற்றிருக்கின்றனர். அதேசமயம், சிலர் போலியான சான்றிதழ்களை பயன்படுத்தி சிங்கப்பூருக்கு வர முயல்கின்றனர்.
போலியான சான்றிதழ்களுடன் சிங்கப்பூர் வந்தால், அவர்கள் பிடிபட்டால் சிறையில் அடைக்கப்படலாம் மற்றும் தண்டப்பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க மனிதவள அமைச்சகம் RMI (Risk Management Intelligence) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
RMI என்பது மனிதவள அமைச்சகத்தால் உங்கள் கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்தும் ஒரு முறை. இதன் மூலம், உறுதிப்படுத்தப்பட்ட RMI சான்றிதழ் கிடைக்கும். சிங்கப்பூர் செல்லும் போது RMI சான்றிதழ் எடுத்துக்கொள்வது முக்கியம். இது விசா விரைவில் ஆமோதிக்கப்படவும், வேலை விரைவில் கிடைக்கவும் உதவும்.
RMI சான்றிதழ் பெற்றவர்கள் கம்பெனிகளில் முன்னுரிமை பெறுகிறார்கள். போலியான சான்றிதழ்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க, சில கம்பெனிகள் RMI சான்றிதழை கட்டாயமாக கேட்கின்றன. இனி அனைத்து கம்பெனிகளும் RMI சான்றிதழை கேட்கலாம். அதனால், நாட்டிலிருந்தே RMI சான்றிதழ் பெற்றுக்கொண்டு செல்லுவது சிறந்தது.
RMI சான்றிதழை மனிதவள அமைச்சின் இணையதளத்தில் RMI பிரிவின் மூலம் அல்லது ஏஜென்ஸியின் உதவியுடன் பெறலாம். இணையதளத்தில் பெறுவது S$98.10 ஆகும், ஆனால் ஏஜென்ஸியின் மூலம் பெறுவது கூடுதலாக செலவாகலாம். சான்றிதழைப் பெறுவது எப்படி என்று தெரியாவிட்டால், ஏஜென்ஸியின் உதவியைப் பெறலாம், இதனால் சரியான முறையில் சான்றிதழைப் பெற முடியும்.