வெளிநாட்டு ஊழியர்கள் சமூக இடங்களுக்குக்குச்செல்ல இனி முன் அனுமதி பெறத் தேவையில்லை.
ஜூன் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வெளிநாட்டு ஊழியர்கள் சமூக இடங்களுக்குக்குச்செல்ல இனி முன் அனுமதி பெறத் தேவையில்லை.
ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் லிட்டில் இந்தியா, ஜூரோங் ஈஸ்ட், சைனாடவுன், கேலாங் சிராய்ஆகிய அதிகக் கூட்டமுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் முன் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இருப்பினும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த இடங்களுக்கு அவர்கள் முன் அனுமதி பெறாமல் செல்ல முடியும்.
அதனுடன், வரும் 14ஆம் தேதியிலிருந்து நடனம் ஆடக்கூடிய இரவு நேரக் கேளிக்கை விடுதிகளில்எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் அகற்றப்படும்.
ஏஆர்டி பரிசோதனை செய்துகொண்டுதான் இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்குச் செல்ல முடியும் என்ற விதிமுறையும் நீக்கப்படுகிறது.
ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் அடிப்படையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.