அபுதாபியில் பாதுகாக்கப்பட்ட உணவுகளுடன் ‘உயிர் கோழி’ விற்பனை செய்ததற்காக சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.

0

“High Quality Foodstuff Trading” என்ற இந்த அங்காடி, உயிருள்ள கோழிகளை பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அருகில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது மக்கள் நலனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால், அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விஷயத்தில் ADAFSA சமரசம் செய்து கொள்ளவில்லை. அனைத்து பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றி, பிரச்சனைகளை சரிசெய்யும் வரை அந்த supermarket மூடிவிட்டனர்.

அனைத்து குளறுபடிகளும் சரி செய்யப்பட்டு, மீண்டும் எந்த விதிமீறலும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்த பின்னரே அந்த supermarket
மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும், உணவு விற்பனை செய்யும் இடங்களில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ADAFSA-வின் இந்த நடவடிக்கை, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.